தமிழியல் கட்சியின் மந்திரம்அச்சுநூல் பொதி

தமிழியல்கட்சிக்கும், தமிழியல் கட்சி உறுப்பினர் ஒவ்வொருவருக்கும், செல்வச்செழிப்புக்கு, கடவுளின் முயக்கம் வேண்டல்! 

இதுவரை நமக்குக் கிடைத்தது அனைத்தும் நாம் கடவுளிடம் கேட்டது மட்டுமே என்று தமிழ்முன்னோர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில் நிறுவியுள்ளனர். 

நம்முடைய செயல், எண்ணம், சொல் (தமிழ்மொழி) அனைத்தும், ஒவ்வொரு தற்பரை நேரமும் நமது கேட்பாக கடவுளிடம் பதிவாகி, அந்த வகைக்கு கடவுள் நம்மை முயக்குகிறது. 

இந்த அடிப்படையில் நம்முடைய தலையெழுத்தை நாம்தாம் எழுதிக்கொள்கிறோம் என்று நிறுவுகின்றனர் தமிழ்முன்னோர்.

செயல்அடிப்படையில்: நாம் கொடுப்பது அனைத்தும் கடவுளிடம் இருந்து நமக்கே முயக்கித்தரப்படுகிறது.

எண்ணஅடிப்படையில்: நாம் நினைப்பது அனைத்தும் கடவுளால் நமக்கு முயக்கித்தரப்படுகிறது.

மொழிஅடிப்படையில்: உங்கள் தேவைகள் எதுவானாலும், கடவுளிடம் நேரடியாகவே கேட்டுப்பெற முடியும் என்று தமிழ்முன்னோர் நிறுவியுள்ளனர். அந்த வகைக்கு, நீங்கள், உங்கள் மனதில் குவிக்க வேண்டிய மாண்பு ஆற்றல் குறித்த கலையே மந்திரம்.

கொடுத்தால் கிடைக்கும் என்கிற செயல் அடிப்படையில்  தமிழியல்கட்சிக்கும், தமிழியல் கட்சி உறுப்பினர் ஒவ்வொருவருக்கும், செல்வச்செழிப்புக்கு, கடவுளின் முயக்கம் வேண்டும் பொருட்டு, தமிழியல்கட்சி, தமிழியல்கட்சி உறுப்பினர்களுக்கு, ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை வழங்கி  அவர்கள் செல்வச் செழிப்பிற்கு அருள் பேணும் பாடாற்றலைப் பயிற்று விக்கும் இயக்கம் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழியல்கட்சியில் இணைந்த ஒவ்வொரு உறுப்பினருக்கும், அவர்தம் செல்வச் செழிப்பிற்கு அருள் பேணும் பாடாற்றலைப் பயிற்றுவிக்கும் கருவியாக ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை அனுப்பித்தரப்படும். 

ஒவ்வொரு தமிழ்மாதமும், அவரவர் உறுப்பினராக இணைந்த நாளில், அருட்காசு ஒன்று (ரூபாய் ஐந்து) அவரவரின், ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழையில் தன் செல்வச் செழிப்புக்கு அருள்பேணும் பாடாற்றலை முன்னெடுக்கும் வகைக்கு அனுப்பி வைக்கப்படும்.

தன் வங்கிக்கணக்தில் அருட்காசு ஒன்று (ரூபாய் ஐந்து) கிடைக்கப்பெற்ற நாளில், கிடைக்கப்பெற்றவர், தான் விரும்பும் ஒரு தொகையை ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழையில் போட்டு வைக்கவேண்டும். 

போட்ட தொகையில் ஒரேயொரு காசையோ பணத்தாளையோ பேணவேண்டிய அருட்காசாக விட்டு விட்டு மீதித்தொகையை எப்போது வேண்டுமானலும் போட்டு எடுத்துக் கொள்ளலாம்.

தமிழியல் கட்சி, தொடர்ந்து இருபத்திமூன்று மாதங்களுக்கு ஒவ்வொரு உறுப்பினருக்கும் அருட்காசு ஒன்று (ரூபாய் ஐந்து) தவறாமல் அனுப்பி வைக்கும்.

தமிழியல் கட்சி உங்களுக்கு அனுப்பிய தொகையின் எண்ணிக்கை அளவிற்கு, ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழையில் காசையோ,பணத்தாளையோ பேணியிருக்க வேண்டியது உங்கள் செல்வச ்செழிப்புக்கு அருள்பேணும் பாடாற்றலுக்குக் கட்டாயம் ஆகும்.

உங்களுக்கு ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை அனுப்பும் போதே உங்களுக்கு வாழாண்டு உடல்நலம் காக்கும் நோக்கப்பதிவுப் புத்தகம் ஒன்றும்  அனுப்பப்படும்.

அந்தப் புத்தகத்தில் 120 ஆண்டுகளின் 1440 மாதங்களுக்கு 1440 அருட்காசு களின்  படம் இடம்பெற்றிருக்கும். 

முதல் இருபத்திமூன்று மாதங்களுக்கு மட்டுமே மந்திரம்அச்சுநூல் பொதியைப் பெற்றவர்களுக்கு தமிழியல் கட்சி அருட்காசு உங்கள் வேண்டுகோள் இல்லாமல ்அருட்காசு அனுப்பும். 

உங்கள் வாழாண்டு காலத்திற்கு அருட்காசு பெற்றிருப்பது உங்கள் விருப்பம். ஒவ்வொரு இருபத்தி மூன்று மாதங்களுக்குப் பிறகு 23ன் மடங்குகளல் நீங்கள் அனுப்பும் தொகையை இருபத்தி மூன்று மாதங்களுக்குப் பிரித்து தமிழியல் கட்சி உங்களுக்கு அனுப்பி வைக்கும்.

உங்களுக்கு முதலாவது அருட்காசு கிடைக்கும்போது நீங்கள் பிறந்த எத்தனையாவது மாதத்தில் கிடைத்ததோ அத்தனையாவது மாதத்து அருட்காசுக்கு தூக்கல்வண்ணம் (ஹைலைட்) தீட்டி வைத்துக்கொள்ள வேண்டும். 

உங்களின் வாழாண்டு உடல்நலம் காக்கும் நோக்கப்பதிவுப் புத்தகத்தின் மூலம்- நீங்கள் எந்த வாழாண்டுக்கு குறிஞ்சித்திணைக் கடவுள்கூறு தெய்வம் சேயோனிடம் அருட்காப்பு வேண்டியிருக்கின்றீர்கள் என்பதையும்,  உங்கள்ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழையில் எத்தனை காசு அல்லது பணத்தாள் அல்லது இரண்டும் கலந்த எண்ணிக்கையையும் வைத்திருக்க வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

தற்போது தமிழியல் கட்சியின் மந்திரம்அச்சுநூல் பொதியின் விலை ரூபாய் தொள்ளாயிரத்து ஐம்பது ஆகும். 

மந்திரம் அச்சுநூல் பொதியில் 

1. மந்திரம் அச்சுநூல்.

2. ஐந்திணைக்கோயில் அருட்காசு பேழை

3. வாழாண்டு உடல்நலம் காக்கும் நோக்கப்பதிவுப் புத்தகம்

4. முதலாவது அருட்காசு

5. தூக்கல் வண்ணத் தூவல் (பேனா)

ஆகிய ஐந்தும் ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழியல்கட்சி