தமிழியல்கட்சியின் தனிமனித மேம்பாட்டுப் பாடாற்றல்

\

நீங்கள் யாராக இருந்தாலும் சரியே! உங்களை அடுத்த கட்டத்திற்கு மேம்படுத்தும் நோக்கமே வகைப்பாட்டியல் என்கிற தமிழியல்.

அதனால், உங்களை அடுத்தடுத்த கட்டத்திற்கு மேம்படுத்த, தமிழியல்கட்சி தொடர்ந்து பாடாற்றும்.

அந்த வகையான தமிழியல் கட்சியின் தனிமனித மேம்பாட்டுப் பாடாற்றலுக்கு நீங்கள் ஐந்திணைக் கோயிலின் வெளியீடு ஆன மந்திரம் நூலை கட்டாயம் கற்க வேண்டும்.

தமிழியல் கட்சியின் தனிமனித மேம்பாட்டுப் பாடாற்றலுக்கு, நீங்கள் கற்க வேண்டிய மந்திரம் நூலை, தமிழியல்கட்சி, ஐந்திணைக்கோயிலில் விலைகொடுத்து வாங்கி, உங்களுக்கு விலையில்லாமல் தர முடியும்.

நீங்கள், தமிழியல் கட்சி விலையில்லாமல் கொடுத்த மந்திரம் நூலை கற்காவிட்டால், 

தமிழியல் கட்சியின் நோக்கமான, தனிமனித மேம்பாட்டுப் பாடாற்றல் அடிப்படையில் உங்களை மேம்படுத்துவதில் தமிழியல் கட்சி  வெற்றி ஈட்ட முடியாது.

அதனால், நீங்கள் மந்திரம் நூலை ரூபாய் 500 வைப்புத் தொகை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். 

கிழமைக்கு (வாரம்) ஒரு கட்டுரைக்கு நாங்கள் அனுப்பும் ஐந்து வினாக்களுக்கு விடை எழுதி அனுப்பி, ரூபாய் பத்தை உங்கள் வைப்புத் தொகையில் இருந்து திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். ஐம்பது கிழமைகளில் உங்கள் வைப்புத் தொகை ரூபாய் ஐநூறை முழுமையாகத் திரும்பப் பெற்றுவிட முடியும். 

நீங்கள், ஒருகட்டுரைக்கு நாங்கள் அனுப்பிய ஐந்து வினாக்களுக்கு விடை எழுதி அனுப்பிய பிறகே, நாங்கள் அடுத்தடுத்த கட்டுரைக்கு உரிய வினாக்களை (கிழமைக்கு ஒரு முறை மட்டும்) அனுப்புவோம்.

நீங்கள் மந்திரம் புத்தகத்திற்கு வைப்புத்தொகையாகச் செலுத்திய ரூபாய் 500ன் நிறைவுத் தொகையைப் பெறும்போது, 

நீங்கள் வியக்கத்தக்க முன்னேற்றத்திற்கான பயணத்தில் நெடியதொரு தொலைவைக் கடந்திருப்பீர்கள். தமிழியல்கட்சியில் இணைந்ததைப் பெரும்பேறாக கருதியிருப்பீர்கள்.

மந்திரம் முனைவர் மாண்பிதழ்!

மந்திரம் நூல், தமிழர் வாழ்வியல் வகைக்கான கல்வி நிறுவனமான, ஐந்திணைக்கோயில், முன்னெடுத்துவரும் 'மந்திரம் முனைவர் மாண்பிதழ்' பெறுவதற்கான ஆய்வுக் கல்விக்குப் பாடநூல் ஆகும். 

மந்திரம் நூலை ஆய்வு செய்து, ஆய்வேடு வழங்கி, மந்திரம் முனைவர் மாண்பிதழுக்கு யாரும் விண்ணப்பிக்கலாம். 

உங்கள் தன்விவரத்துடன், மந்திரம் நூல் குறித்த உங்களின் முதலாவது ஆய்வுக் கட்டுரையை யுனிக்கோடு எழுத்துருவில் எங்களுக்கு அனுப்பி வைத்ததும் உங்கள் பெயரை மந்திரம் முனைவர் மாண்பிதழ் ஆய்வு மாணவர் பட்டியலில் இணைத்துக் கொள்வோம். 

ஒவ்வொரு மாதத்திற்கு ஒவ்வொரு கட்டுரை என்று பதினோரு கட்டுரைகள் நீங்கள் ஐந்திணைக்கோயில் மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். பனிரெண்டாவது மாதத்தில் மந்திரம் நூலுக்கான முழு ஆய்வு அறிக்கையை அ4 வடிவிலான புத்தகமாக்கி அனுப்பி வைக்க வேண்டும். 

ஆய்வறிக்கையை அ4 வடிவிலான புத்தகமாக்கி அனுப்பிய அனைவரும் மந்திரம் முனைவர் மாண்பிதழ் பெறுவதற்கு தகுதியானவர்கள் ஆவார்கள். உங்கள் மின்அஞ்சல் முகவரிக்கும், உங்கள் அஞ்சல் முகவரிக்கும் உங்கள் முனைவர் ஆய்வுபடிப்பு நிறைவுக்கான மந்திரம் முனைவர் மாண்பிதழ் அனுப்பிவைக்கப்படும்.

ஒவ்வொரு ஆண்டும், மந்திரம் நூலுக்கான மிகச்சிறந்த ஆய்வேடுகளாக இரண்டினை ஐந்திணைக்கோயில் தேர்வு செய்யும். இரண்டு ஆய்வேடுகளில் ஒவ்வொன்றை வழங்கிய முனைவருக்கும் ரூ.6500 பணப்பரிசு ஐந்திணைக்கோயிலால் வழங்கப்படும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழியல்கட்சி