தமிழியலுக்குக் கட்சி ஏன்?

உலகினரின் பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்பன, தங்கள், தங்கள் மக்கள் இயங்குவதற்கு தனிமனித சான்றோர்களால் நிறுவப்பட்ட கோட்பாடுகள்.

கோட்பாடு என்பதும் இயம் என்பதும் ஒரேவகையான பொருள்கொண்ட தமிழ்ச்சொற்கள் ஆகும்.

பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்பன, மக்கள் எப்படி இயங்க வேண்டும் என்கிற வரையறை கொண்டுள்ள இயங்கள் ஆகும்.

நாம் பேசவந்த தலைப்பான தமிழியல் இயமும் இயக்கமும் கொண்டது ஆகும்.

தமிழியல் என்பது பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்கிற எந்த அயலின் வரவுக்கு முன்பு, பல்லாயிரம் ஆண்டுகளாக, தமிழினம் தனித்த இனமாக, ஒட்டுமொத்த நாவலந்தேய இந்தியாவைச் சொந்தமாகக் கொண்டு, நிலைத்த வாழ்க்கையில் பாடாற்றியிருந்த இயக்கமும் அந்த இயக்கம் பற்றிய இயமும் ஆகும். 

தமிழியல் தமிழினத்தின் எந்த தனிமனிதச் சான்றோரின் பட்டறிவோ, சொந்தக் கருத்தோ அன்று. 

தமிழியல் வெறுமனே இயம் அல்லவே அல்ல. 

தமிழியல் இயக்கமும் இயமும் ஆன இயல் ஆகும்.

நடைமுறை மற்றும் கோட்பாட்டின் நீட்சி என்பதாக இயல்+ கை=  இயற்கை என்கிற சொல்லை அமைத்து, இயற்கை என்பது எல்லாமும் என்று நிறுவியுள்ளனர் தமிழ்முன்னோர். 

பிராமணியம், அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள் என்கிற அயல்கள் அனைத்தும் மக்கள்மீது அதிகாரம் செலுத்துகிற காரணம் பற்றி அவைகள் அனைத்தும் பாகுபாட்டியல் கோட்பாடுகள் ஆகும்.

அந்தப் பாகுபாடுகளுக்கு முரண்படுகிற மக்களுக்கு ஆதரவாக உருவாக்கப்பட்ட முரண்பாட்டுக் கோட்பாடே மார்க்சியம் ஆகும். 

பாகுபாடு என்பது உடைமைக்கான சிந்தனையோ, முதலாளித்துவமே அன்று.

பாகுபாடு என்பது ஒற்றை முதலாளித்துவ ஆதிக்க அடாவடிக்கு ஆதரவான கருத்தியல் ஆகும்.

முரண்பாடு என்பதும்  உடைமைக்கான சிந்தனையோ, முதலாளித்துவமே அன்று.

முரண்பாடு என்பது ஒற்றை முதலாளித்துவத்துவத்தைச் செழுமைப்படுத்துவதும், நிருவாகக் கூலியாகவோ உடலுழைப்புக் கூலியாகவோ உரிமைத்தளத்தில்இயங்குவதும் ஆகும்.

முரண்பாடு என்பது ஒற்றை முதலாளித்துவத்துவத்தைச் செழுமைப்படுத்தி, அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக வாழும் காலம் முழுவதும் உரிமைக்காகப் போராடிக் கொண்டிருப்பதற்கான கோட்பாடு ஆகும்.

உலகினரின் கோட்பாடுகள் ஆன பாகுபாட்டியல், முரண்பாட்டியல் இரண்டுமே நான்மட்டுமே! என்று பாகுபாடு பேணுவதும்,  இல்லையில்லை நான்தான் எனறு முரண்பாடு பேணுவதும் ஆகிய ஓர்மைக் கோட்பாடுகள் ஆகும்.

தமிழியல் - நானும் நீயும் என்கிற இருமெய் கொண்டாடும் இயலும், வகைப்பாட்டு இயலும் ஆகும்.

நடப்பில் நாம், பிராமணியக் கோட்பாட்டுக்கு ஆதரவுத்தளத்திலோ, பிராமணிய எதிர்ப்பில் அராபியம், ஐரோப்பியம், உலகமதங்கள், மார்க்சியம் என்கிற கோட்பாடுகளோடு கைகோர்த்துக் கொண்டோ இயங்கி வருகிறறோம். 

இதன் காரணம்பற்றி கடந்த 3500 ஆண்டுகளாகத் தமிழினம் தம் உடைமைகளைக் கொஞ்சம் கொஞசமாக இழந்து தமிழ்நாட்டைக் கூட நிருவாகத்திற்கான உரிமையாக மட்டுமே கொண்டிருக்கிறது.

3500 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து தமிழர்களும் உடைமைத்தளத்தில் இயங்குவதற்கான இயலாக, வகைப்பாட்டியலாக, முன்னெடுக்கப்பட்டிருந்ததே தமிழியல்.

மீண்டும் தமிழியலில் ஒட்டுமொத்த தமிழினம் உலாவந்து ஒன்றிய ஆட்சியை வகைப்பாட்டியல் அடிப்படையில் நிறுவும் நோக்கத்திற்கும், 

ஒட்டுமொத்த உலகத்திற்கும் வகைப்பாட்டியலைக் கற்றுக்கொடுத்து உலகஅமைதியை நிலைநாட்டும் தொலைநோக்கத்திற்கும் உரியதே தமிழியல்கட்சி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழியல்கட்சி