தமிழியல் கட்சியின் தமிழ்நாடு, நாவலந்தேய (இந்தியா) ஒன்றிய ஆட்சியில்:

1. தமிழ்நாடு அரசின் எந்தப் பணிகளிலும் பிறமொழிப்பெயர் கொண்ட அயல்சார்பாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தமிழ்நாடு அரசில் அதற்கான உறுதியான சட்டம் முன்னெடுக்கப்படும்.

2. நாவலந்தேய (இந்தியா) ஒன்றிய அரசின் பணிகளில் சொந்தஇயல் பேணும் மக்கள் என்கிற அடிப்படையில், அரசியல் அமைப்புச்சட்டம் அட்டவணை எட்டில் ஆட்சி மொழிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட 22மொழிகளில், தம்தம் சொந்த மொழிகளில் பெயர் சூட்டியவர்களுக்கு நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும்.

3. தமிழ்நாடுஅரசு, நாவலந்தேய (இந்தியா) ஒன்றியஅரசு, தனியார் உள்ளிட்ட, தமிழ்நாட்டின் எந்தக் கல்வி நிறுவனத்திலும் பனிரெண்டாம் வகுப்புவரை தமிழ்வழிக்கல்வி மட்டுமே முன்னெடுக்கப்படும். தமிழ்நாடு அரசில் அதற்கான உறுதியான சட்டம் முன்னெடுக்கப்படும்.

4. தன்னைஇழக்கச் செய்கிற, பண்பாட்டைச் சீரழிக்கிற மது வணிகம் தமிழ்நாட்டில் முற்றாகக் கைவிடப்படும்.

5. கல்விஉரிமையை மறுக்கிற, நீட்போன்ற அனைத்துத் தடைத்தேர்வுகளையும் தமிழ்நாடுஅரசிலும் நாவலந்தேய (இந்தியா) ஒன்றிய அரசிலும் கைவிடப்படும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழியல்கட்சி